சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்து துன்புறுத்தப்படாமல் சமூகக் கருத்துக்களை வழங்குவதில் முன்னோடியாக செயற்படுங்கள் – ஊடகவியலாளர்களிடம் ஊடக அமைச்சர் கோரிக்கை!
Wednesday, January 5th, 2022சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாத்து, துன்புறுத்தல்கள் ஏற்படாதவாறு சமூகக் கருத்துக்களை வழங்குவதில் முன்னோடியாக செயல்படுமாறு அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த இரண்டு வாரங்களுக்குள், சிறுவர்கள் தொடர்பில் முழு சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய மூன்று செய்திகளை முன்னிலைப்படுத்தி அவர் ஊடகங்களிடம் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில் –
இது ஊடகங்களுக்குள் விவாதிக்கப்பட வேண்டிய விடயம். நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் சிறுவர்களை அடிக்காமல் உருவாக்க முடியாது என்ற ஒழுக்கக்கேடான, பாரம்பரிய சித்தாந்தத்தை இந்த நூற்றாண்டு நிராகரித்துள்ளது. வளர்ச்சியடைந்த நாகரிகத்தில் முன்னோக்கி செல்லக்கூடிய தருணம் இது என்றும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான செய்திகளை வெளியிடுதல், அது எவ்வாறு அறிக்கையிடப்படுகிறது. மேலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் ஊடகங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பெரும் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|