சிறுவர்களிடையே தொற்றா நோய்களின் தாக்கம் அதிகரிப்பு – பல பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் சுற்றறிக்கைக்கு அமைய செயற்படுவதில்லையெனவும் வைத்தியர வாசன் ரட்ணசிங்கம் குற்றச்சாட்டு!
Wednesday, October 27th, 2021சிறுவர்களிடையே தொற்றா நோய்களின் தாக்கம் தற்போது அதிகரித்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் மத்தியக்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாடசாலை சிற்றுண்டிச்சாலை எவ்வாறு அமைய வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், பல சிற்றுண்டிச்சாலைகள் அந்த சுற்றறிக்கைக்கு அமைய செயற்படுவது இல்லையெனவும் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேநேரம், மாணவர்களின் இணை பாடவிதான செயற்பாடுகள் மற்றும் உடற்பயிற்சி முறைமைகள் குறித்தும் கல்வி அமைச்சுடன் தங்களது கருத்துக்களைப் பரிமாறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இயற்கை அனர்த்தங்களால் 45 மாணவர்கள் உயிரிழப்பு: 146 பாடசாலைகள் சேதம்!
பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம் - அரச சேவை மாகாண சபைகள் மற்...
இந்த மாதத்தில் IMF உதவி கிடைக்கலாம் - குழப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை - ஜனாதிபதி ரணில் விக்ரம...
|
|