சிறுவர்களிடையே கொரோனா பரவல் அதிகரிப்பு – கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் எச்சரிக்கை!
Sunday, February 20th, 2022நாளாந்தம் கொரோனா தொற்றுக்குள்ளான சிறுவர்களை அனுமதிக்கும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜி விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு சுமார் 20 சிறுவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சிறுவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நான்கு விடுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வைத்தியசாலையில் தற்போது 80 சிறுவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எவ்வாறாயினும், கொவிட்-19, வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு உட்பட இதேபோன்ற நோய்கள் பரவுவதால் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பணிப்பாளர் வலியுறுத்தியுள்ளார்.
000
Related posts:
கொழும்பு அரசியலில் அதிரடி மாற்றம்: பிரதமரானார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!
பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு ஆதரவாக டெங்கு ஒழிப்பு உதவியாளர்களும் இணைவு!
நாட்டில் 3 இலட்சம் சிறார்கள் பாதுகாப்பற்ற முறையில் வாழ்கின்றனர் - நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்...
|
|