சிறுவர்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்கு ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாகம் முயற்சி!

சிறுவர்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக முயற்சியாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாகத்தினர் சிறு சேமிப்பு திட்டமொன்றை பூம்புகார் சண்முகா முன்பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனின் வழிநடத்தலில் இரவீந்திரன் நீலவர்னா அவர்களது முயற்சியால் பூம்புகார் சண்முகா முன்பள்ளி மாணவர்களுக்கு வங்கி கணக்கு ஒன்று சிறுவர் தினத்தை முன்னிட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின்போது நல்லூர் நிர்வாக செயலாளர் இரவீந்திரதாசன் மற்றும் பிரதேச உறுப்பினர் முன்பள்ளி சிறுவர்களின் பெற்றோர்கள் முன்பள்ளி ஆசிரியர் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அரியாலை மணியம்தோட்டம் 4ஆம் குறுக்கு வீதி கட்சியின் நல்லூர் பிரததேச சபை உறுப்பினர்களது முயற்சியால் தார் வீதியாக புனரமைக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|