சிறுப்பிட்டி மத்தி மக்களின் கோரிக்கைக்கு ஈ.பி.டி.பி உடனடி நடவடிக்கை – செல்லப்பிள்ளையார் வீதியில் மூன்று மதகுகள் அமைக்க நடவடிக்கை!
Tuesday, March 2nd, 2021சிறுப்பிட்டி மத்தி செல்லப்பிள்ளையார் வீதி அபிவிருத்தியின் போது குறித்த வீதியை கடந்து மழை நீர் வழிந்தோடுவதற்கான பொறிமுறை உள்வாங்கப்படாது அமைக்கப்படுவதால் பெரும் அசௌகரியங்களை தாம் எதிர்கொள்ள நேரிடும் என அப்பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்டம் முன்வைத்திருந்த கோரிக்கைக்கு கட்சியின் வலி கிழக்கு நிர்வாக பொறுப்பாளர் இராமநாதனின் முயற்சியால் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது –
சிறுப்பிட்டி மத்தி செல்லப்பிள்ளையார் வீதி I Project திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டு வருகின்றது. ஆனால் குறித்த வீதியின் ஊடாக மழைநீர் வழிந்தோடுவதற்கு வாய்க்கால் அமைக்கப்படாது குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இவ்வீதியில் நீர் வழிந் தாடும் வாய்க்கால் அமைப்பதற்கு நடவடிக்கைமேற்கொண்டு தருமாறு அப்பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளர் ஐங்கரன் இராமநாதனிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
மக்களது நியாயமான கோரிக்கையை கருத்தில் கொண்ட ஐங்கரன் இராமநாதன் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் I Project திட்டத்தின் நிறைவேற்று பொறியியலாளர்களுடன் தொடர்பு கொண்டு இவ்விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டியிநிருந்தார்.
இதனையடுத்து நேற்றையதினம் (01.03.2021) குறித்த விடயம் தொடர்பில் வீதி அபிவிருத்தி நடைபெறும் இடத்திற்கு வருகைதந்து சனசமூக நிலைய நிர்வாகம், பிரதேச இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் கலந்துரையாடி பிரச்சினைகளை ஆராய்ந்தறிந்துகொண்டார்.
இதனையடுத்து மக்களது நியாயமான கோரிக்கையின் அடிப்படையில் மழைநீர் வழிந்தோடுவதற்கு மூன்று மதகுகள் அமைப்பதாக. தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது..
இதேபோன்று உரும்பிராய் தெற்கு, யோகபுரம் வீதி அகலிப்பு தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் அவ்வீதி அகலிப்பின் போது இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாதவண்ணம் மேற்கொள்வதற்கு முயற்சிகள் எடுப்பதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் I Project திட்டத்தின் நிறைவேற்று பொறியியலாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|