சிறுபோக பயிர்ச்செய்கைக்கு இரசாயன உரம் இறக்குமதி – தனியார்துறை இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு!

Monday, April 18th, 2022

சிறுபோக பயிர்ச்செய்கைக்கான தேவையான இரசாயன உரத்தை பெறுவதற்கான நடவடிக்கைகளை தனியார்துறை இறக்குமதியாளர்கள் முன்னெடுத்துள்ளனர்.

இது பற்றிய முதல்கட்டப் பேச்சுவார்த்தை இன்று விவசாய அமைச்சில் நடைபெறும். விவசாய உர இறக்குமதிக்காக வழங்கப்படவிருக்கும் நிவாரணம் பற்றி இந்தப் பேச்சுவார்;த்தையின் போது கவனம் செலுத்தப்படும்.

இதன் காரணமாக விவசாயிகளுக்கு சிறுபோகத்தில் நிவாரண விலையில் உரத்தை வழங்க முடியும் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: