சிறுநீரக நோயாளர்களை முன்கூட்டியே இனம் காணும் சிகிச்சை முகாம்!

Monday, June 5th, 2017

முல்லைத்தீவு – வெலி-ஓயா பிரதேச செயலகப்பிரிவில் சிறுநீரக நோயாளர்களை முன்கூட்டியே இனம் காணும் சிகிச்சை முகாம் தற்போது நடைபெற்று வருகிறது.

சிறுநீரக நோய்த்தடுப்பு ஜனாதிபதி செயலகம் இதனை நடத்திவருகிறது.சுகாதார அமைச்சும் முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் ஏனைய சில நிறுவனங்களும் இணைந்து இதனை ஒழுங்கு செய்துள்ளன.

ஜனகபுர விகாரையில் எதிர்வரும் திங்கட்கிழமை சிறுநீரக பரிசோதனை முகாம் இடம்பெறும். இந்த நிகழ்ச்சித் திட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி வரை இடம்பெறும்.

இந்நாட்களில் அனுராதபுரம் மாவட்டத்தின் மகவிலச்சிய பிரதேச செயலகப் பிரிவிலும் சிறுநீரக நோயாளர்களை இனங்காணும் சிகிச்சை முகாம்கள் இடம்பெற்று வருகின்றன. இதன் கீழ் பேமடுவ விகாரையிலும் பேமடுவ பொலிஸ் நிலையத்திலும் எதிர்வரும் திங்கட்கிழமை இரண்டு சிகிச்சை முகாம்கள் இடம்பெறும்.

Related posts: