சிறிலங்கா எயர்லைன்ஸில் முதல் விமானியாக தமிழர் ஒருவர்!

Wednesday, November 30th, 2016

சிறிலங்கன் எயர்லைன்ஸ் முதல்விமானி பதவி யாழ்ப்பாண தமிழன் ஒருவருக்குக் கிடைத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அந்த விமானி தயாளன் தெரிவித்தது பின்வருமாறு: கடும் போட்டிகளுக்கு மத்தியில் பல வருடங்கள் தொடர்ந்தும் மேற்கொண்ட கடும் உழைப்பு மற்றும் அர்பணிப்புக் காரணமாக எனது இலக்கும் கனவும் உண்மையாக மாறியதையிட்டு நான் உண்மையில் மகழ்ச்சியடைகிறேன். சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தில் எயார்பஸ் ஏ320 விமானத்தின் முதல் விமானி பதவி எனக்குக் கிடைத்துள்ளது. இலங்கையின் தேசியக் கொடியை சாடுகளுக்கு எடுத்துச் செல்லும் சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் ஒரே யாழ்ப்பாண தமிழன் என்ற வகையில் எனக்கு புதுமையான மகிழ்ச்சி ஏற்படுகின்றது. எனக்கு ஆதரவு ழங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட காலத்துக்குப் பின்னர் உங்களில் பலரை நான் விரைவில் வானில் சந்திப்பேன் என்று நம்புகிறேன் என தயாளன் குறிப்பிட்டுள்ளார்.

srilankan_b

Related posts:

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் பாதிக்கப்பட்ட கடற்பகுதியை உரிய ஆய்வின் பின் கடற்றொழிலுக்காக அனுமதிக்கப்...
மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் வருமானம் பெறுவோர் வரி செலுத்துவது தொடர்பில் விரைவி...
சில்லறை எரிபொருள் சந்தையில் பிரவேசிக்கத் திட்டமிட்டுள்ள இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள், - QR இன்றி எர...