சிறியளவில் வேலை செய்து கொண்டிருப்பதா அல்லது மீண்டும் நாட்டை மூடி வைப்பதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் – பிரதி பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை!

நாட்டை மேலும் சில மாதங்களுக்கு முழுமையாக மூட வேண்டிய நிலை ஏற்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு நாடு முடக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் செய்ய முடியாமல் போன அனைத்து விடயங்களையும் ஏனைய நாட்டைகளை போன்று செய்துகொள்ள முயற்சித்தால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
இந்த வருட கடைசி வரை சிறியளவில் வேலை செய்து கொண்டிருப்பதா அல்லது இரண்டு வாரங்களில் மீண்டும் நாட்டை மூடி வைப்பதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
பயணக்கட்டுப்பாடு காலப்பகுதியில் அத்தியாவசிய சேவை கடிதம் அனுப்பி அத்தியாவசிய சேவையற்ற பலரை பணிக்கு அழைக்க நிறுவனங்களின் தலைவர்கள் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
இம்முறை அவ்வாறான நிலைமைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|