சிறார்களின் எதிர்காலம் கருதி அனைவரும் உதவி புரிய வேண்டும் – யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் !
Wednesday, July 11th, 2018சமூகத்தில் உள்ள தலைவர்கள் அனைவரும் சிறார்களின் எதிர்காலம் கருதி உதவி புரிய வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி வலயமட்ட முன்பள்ளிகளின் விளையாட்டு விழா கிளிநொச்சியில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் கருத்துரைக்கையில்:
முன்பள்ளி சிறார்களைக் கட்டிக்காத்து பராமரிப்பது என்பது மிகச்சிரமமானது. அதேவேளை சிறார்களின் உடல் உள ஆரோக்கியம் என்பது மிக முக்கியமானது. ஆகவே முன்பள்ளிகள் என்பது கல்விக்கு அத்திபாரமாக அமைகின்றது. முன்பள்ளிகளை பராமரிப்பது என்பது பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், வைத்தியசாலைகள் போன்றன அல்ல.
அங்கு நிரந்தரக் கட்டடங்கள், நிரந்தர ஆசிரியர்கள் குறைவு சமுதாயத்தில் உள்ள தலைவர்கள் அனைவரும் இவ்வாறான முன்பள்ளிகளுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|