சிறப்பு ஏற்பாடுகள் சட்டம் நீடிக்கப்படும்!

Thursday, January 5th, 2017

போரினால் இடம்பெயர்ந்த மக்கள் தமது வாக்குகளை அளிக்கும் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்ததை நீடிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மனங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

2013ஆம் ஆண்டு 27ஆம் இலக்க வாக்காளர்களைப் பதிவு செய்யும் சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தைச் செயற்படுத்தும் காலப்பகுதி 2015ஆம் ஆண்டு ஜீன் மாதம் 19ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. இது குறித்து ஆராய்வதற்கான நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசுக்கமைய இந்தப் பதிவுகளை மேற்கொள்வதற்கு மேலும் கால அவகாசம் தேவை என்று இனங்காணப்பட்டுள்ளது. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் காலத்தை மேலும் 4 வருடங்களினால் அதிகரிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள உத்தேச வாக்காளர்களைப் பதிவு செய்யும் சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தை வர்தமானியில் பிரசுரிப்பதற்கு, அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற அனுமதியைப் பெறுவதற்காக இந்தக் குழுவின் தலைவர் என்ற ரீதியில் நீதி அமைச்சர் முன் வைக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.

kayandha_Fotor

Related posts: