சிறப்புற நடைபெற்ற தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா!

Monday, August 28th, 2023

வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின்  தேர்த்  திருவிழா இன்று(28)   இடம்பெற்றது.

காலை 6.00 மணியளவில் கொடித்தம்ப பூசை இடம்பெற்றதுடன் காலை 7.00 மணியளவில் இடம்பெற்று வசந்த மண்டப பூசையைத் தொடர்ந்து அம்பாள் உள்வீதி திருநடனத்துடன்  வந்து  தேரிலே  9.00 மணியளவில்  எழுந்தருளி வெளி வீதி வலம் வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார்

ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டு வந்து அம்பாளின் அருள் வேண்டி கற்பூரச் சட்டி எடுத்தும் ; காவடிகள் எடுத்தும்; அங்கப் பிரதிஷ்டை மேற்கொண்டும் தமது நேற்றிக்கடன்களை நிறைவேற்றினர்.

இதேவேளை வருடாந்த மகோற்சவத்தின் நிறைவு நாளான தீர்த்தத் திருவிழா  நாளை காலை இடம்பெற்று  மாலை கொடியிறக்கத்துடன் வருடாந்த மகோற்சவம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: