சிறப்பான எதிர்காலத்தை நோக்கி நாடு தற்போது முன்னேறிக் கொண்டிருக்கிறது – அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்தபின் அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

கொழும்பு துறைமுக நகரில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று திங்கட்கிழமை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இந்த விஜயத்தின்போது போது நீதி அமைச்சர் அலி சப்ரி துறைமுக நகர அதிகாரிகளை சந்தித்தும் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது துறைமுக நகரத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம், முதலீடுகள் மற்றும் வணிக வாய்ப்புகளுக்கள் அதிகரிக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் சிறப்பான எதிர்காலத்திற்காக நாடு தற்போது முன்னேறிக் கொண்டிருக்கிறது என குறிப்பிட்ட அமைச்சர் இந்த வளர்ச்சி இந்த வாய்ப்புக்கு உதவும் என தாம் நம்புவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விஜயத்தின் போது நீதி அமைச்சின் செயலாளர் ஜனக ரணதுங்கவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
எதிர்வரும் 03ம் திகதி தேசிய கணக்காய்வு சட்டமூலம் சமர்ப்பிப்பு!
சாதாரணதரப் பரீட்சை: சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!
யாழ்ப்பாண பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் கவன ஈர்ப்புப் போராட்டம்!
|
|