சிறந்த சந்தை வாய்ப்பை ஊக்குவிக்க நடவடிக்கை!

Tuesday, June 26th, 2018

தொழில் முயற்சியாளர்களுக்குரிய கடன் திட்ட முறைமையை அறிமுகப்படுத்தி, அவர்களின் உற்பத்திக்கான சிறந்த சந்தை வாய்ப்பையும் நியாயமான விலையையும் பெற்றுக்கொடுக்க நிகழ்ச்சித் திட்டமொன்று அவசியம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் அத்தகைய உற்பத்திகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுமானால் அவற்றை தவிர்ப்பதற்கும் திட்டங்கள் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய கைத்தொழிற்துறையை கட்டியெழுப்புவதன் மூலமே உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகள் எழுச்சிபெற்றுள்ளன.

வெளிநாடுகளிலிருந்து நவீன தொழில்நுட்ப அறிவு மற்றும் ஆலோசனைகள் அவசியம் என்றபோதும், தேசிய தொழில் முயற்சியாளர்களிடமுள்ள பலம் மற்றும் அனுபவம் தொடர்பில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts: