சிறந்த கட்டமைப்பு கொண்ட சமூகம் நாட்டுக்கு அவசியம் – கல்வி அமைச்சர் வலியுறுத்து!

Monday, August 2nd, 2021

தற்போதைய சூழ்நிலையில் சிறந்த கட்டமைப்பு கொண்ட சமூகம் நாட்டுக்கு அவசியம் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற நிகழ்ச்சில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் – சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது மனிதாபிமானமற்ற முறையில் அவர்களை நடத்துவது துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற சமீபத்தைய நிகழ்வுகள் அதற்கான அவசியத்தை எடுத்து காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே சிறந்த கட்டமைப்பு கொண்ட சமூகம் இந்த காலகட்டத்தில் தேவை என்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை அரசாங்கம் இது தொடர்பாக பல முடிவுகளை எட்டியுள்ளது, அதே நேரத்தில் பல சட்டங்கள் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டன என்றும் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: