சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் சிலருக்கு இடமாற்றம் !
Saturday, May 28th, 2022சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதன்படி, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆர்.எஸ்.தமிந்த தென் மாகாணத்திலிருந்து கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
குற்றவியல் மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தென்மாகாணத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எல்.கே.டப்ள்யூ. கே. சில்வா கிழக்கு மாகாணத்திலிருந்து குற்றவியல் மற்றும் போக்குவரத்து பிரிவுற்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மாலைதீவு ஆசிரியர்களுக்கு இலங்கையில் பயிற்சி!
எதியோப்பிய அமைச்சர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் புதிய தலைவரானார்!
இந்திய கடற்றொழிலாளர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை!
|
|