சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்!

Wednesday, April 12th, 2023

சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் நேற்று தமது 76 ஆவது வயதில் காலமானார்.

உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அவர், சூரியன் வானொலி உள்ளிட்ட சில உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்களின் செய்தியாளராக நீண்டகாலமாக செயற்பட்டிருந்தார்.

நாட்டில் யுத்தம் இடம்பெற்ற நெருக்கடியான காலகட்டங்களில் தமிழ்ப் பிரதேசங்களில் தமக்கான அச்சுறுத்தல்களையும் கருத்திற்கொள்ளாது செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.

அவரின் பூதவுடல், வவுனியா வைரவபுளியங்குளம் 10 ஆம் ஒழுங்கையின் உள்ள அவரது இல்லத்தில், அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இறுதிக் கிரியைகள் நாளையதினம் இடம்பெறவுள்ளதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: