சிமெந்து மற்றும் கம்பி போன்றவற்றின் விலையை நிர்ணயிக்க தீர்மானம் – நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவிப்பு!

Friday, September 9th, 2022

நாட்டில் சிமெந்து மற்றும் கம்பி போன்ற முக்கிய கட்டுமான பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பது தொடர்பான பரிசீலனையை நுகர்வோர் விவகார அதிகாரசபை மேற்கொண்டுவருகிறது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிந்து உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு வர்த்தக அமைச்சருக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க விடுத்த பணிப்புரைக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2022 ஜூன் வரை அரச மற்றும் தனியார் விநியோகஸ்தர்களால் விற்பனை செய்யப்படும் 50 கிலோகிராம் சிமெந்து மூடையின் சராசரி விலை 187 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 98 சதவீதம் அதிகரித்துள்ளதாக கட்டுமான கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: