சிமெந்தின் விலை அதிகரிப்பு – நுகர்வோர் விவகார அதிகார சபை அனுமதி!

Saturday, November 23rd, 2019

50 கிலோ கிராம் நிறையுடைய சிமெந்து மூடை ஒன்றின் விலையை 100 ரூபாவால் அதிகரிப்பதற்கு மூன்று நிறுவனங்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 12 ஆம் திகதிக்கு பின்னர் பொதியிடப்பட்ட சீமெந்து மூடைகளுக்கு மாத்திரமே விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் N.S.M.பவுசர் குறிப்பிட்டார்.

அதன்படி, 995 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மூடை சிமெந்து 1,095 ரூபாவாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: