சினோபார்ம் தடுப்பூசியை நான்காவது தடுப்பூசியாக பயன்படுத்த தீர்மானம் – சுகாதார அமைச்சு தீர்மானம்!

Saturday, January 7th, 2023

சினோபார்ம் தடுப்பூசியை நான்காவது தடுப்பூசியாக பயன்படுத்த இலங்கை சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டில் பைசர் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தினாலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவக்கூடிய அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் இதுவரை கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்களை  பெறாதவர்கள் சினோபார்ம் தடுப்பூசிகளைப் பெறுமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது இலங்கையில் 1.8 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் சுகாதார அமைச்சில் இருப்பதாக இலங்கை தொற்று நோயியல் பிரிவின் புதிய தலைமை தொற்று நோயியல் நிபுணரான வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஆறு மில்லியன் பேர் இதுவரை பூஸ்டர் தடுப்பூசிகளை பெறவில்லை எனலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: