சினோபார்ம் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்கள் தடையின்றி வெளிநாடுகளுக்கு செல்லலாம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Thursday, August 26th, 2021

சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் வெளிநாடு செல்ல முடியாது என்ற ஒரு நிலை இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

ஸ்வீடன், ஹங்கேரியா, கனடா, நெதர்லாந்து, ஈராக், ஜோர்தான், மாலைத்தீவு, வடகொரியா, கட்டார், பாகிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகள் சைனோபார்ம் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர்.

மேலும் பல நாடுகள் குறிப்பிட்ட தடுப்பூசிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்று பெயர் குறிப்பிடவில்லை என்பதுடன், தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு அந்த நாடுகளுக்கு உட்பிரவேசிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நடமாடும் ஒட்சிசன் அலகுகளை இலங்கை பெற்றுக் கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்றது.

இலங்கையில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா வழங்கும் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது என சுகாதார அமைச்சர் இந்த கலந்துரையாடலின் போது குறிப்பிட்டார்.

இதேபோன்று டோசி என்ற மருந்தை இலங்கைக்கு விநியோகிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்துமாறும் அமைச்சர் இதன் போது கேட்டுக்கொண்டார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை தொடர்ந்தும் விருத்தி செய்வது குறித்து இந்த கலந்துரையாடலின்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது

Related posts: