சினிமா திரையரங்குகளை திறக்க அனுமதி – கலாச்சார விவகார அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

கொரோனா தொற்றை அடுத்து இலங்கையில் மூடப்பட்ட சினிமா திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கலாச்சார விவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய நாடு முழுவதும் உள்ள சினிமா திரையரங்குகளை எதிர்வரும் 27ஆம் திகதிமுதல் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய திரையரங்குள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் கடந்த மார்ச் மாத இறுதியில் மூடப்பட்டது.
எனினும் நாட்டில் தற்போது கொரோனா பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால் மீண்டும் 27 ஆம் திகதி முதல் திரையரங்குகள் திறக்கப்படுவதாக கலாச்சார விவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இந்திய கடல் பாதுகாப்பு படையினரால் 10 இலங்கை மீனவர்கள் கைது!
இலங்கை வருகிறார் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர்
கொரோனா வைரஸின் உச்சம் - யாழ்ப்பாணத்தில் 10 குடும்பங்களும் 3 வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன!
|
|