சித்த வைத்திய பயிற்சி நெறியை ஊக்கப்படுத்த முயற்சி!

வடக்கில் அடுத்த வருடம் சித்த வைத்தியம் சார்ந்த பயிற்சி நெறியை கற்பதற்கு புலமைப்பரிசில் மூலமாக வெளிநாடுகளுக்கு பயிற்சிநெறிக்கு அனுப்பும் செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மருத்துவர் திருமதி.சி.துரைரட்ணம் தெரிவித்துள்ளார்.
சித்த வைத்தியம் சார்ந்த பயிற்சி நெறியை ஊக்கப்படுத்துவதற்கும் இதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடமாகாண சித்த வைத்தியத்துறை திணைக்களப்பணிப்பாளர் மருத்துவர் தெரிவித்தார்.
வடமாகாணத்தில் சித்த வைத்தியம் சார்ந்த துறையில் உள்ளவர்களுக்கு, அவர்களின் ஆற்றலை விருத்தி செய்வதற்கு திணைக்களத்தினால் பல்வேறு பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
குறைவடைந்துவரும் நுகர்வோர் கேள்விகள்!
நாளை குடாநாட்டின் சில பகுதிகளில் மின்தடை - மின்சார சபை அறிவிப்பு !
பயனாளிகளை தேர்வு செய்வதில் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளிடம் தெரிவிப்பது அவசியம்...
|
|