சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து!

Tuesday, April 3rd, 2018

தமிழ் சிங்கள புத்தாண்டுக்காக பயணம் செய்யும் பொதுமக்களின் நன்மை கருதி கடந்த வருடங்களைப் போன்று விசேட போக்குவரத்து சேவைகளை புகையிரத திணைக்களமும் இலங்கைபோக்குவரத்து சபையும் ஒழுங்கு செய்துள்ளன.

இதற்கு மேலதிகமாக தனியார் பஸ் சேவைகளும் இடம்பெறவுள்ளன.

விசேட புகையிரத சேவை எதிர்வரும் ஏழாம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை இடம்பெறும் என்று மேலதிக புகையிரத பொது முகாமையாளர் விஜயசமரசிங்க தெரிவித்துள்ளார். இந்தபுகையிரத சேவைகள் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை, மாத்தறை, அனுராதபுரம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் வரை இடம்பெறவுள்ளன.

அத்துடன் எதிர்வரும் ஆறாம் திகதி இலங்கை போக்குவரத்து சபையின் விசேட பஸ் சேவைகள் ஆரம்பமாகும் என்று அதன் தலைவர் ராமல் சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.

Related posts: