சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மேலதிகமாக 2000 பஸ்கள் சேவையில்!

Sunday, March 25th, 2018

இலங்கை போக்குவரத்துச் சபை தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களின் நலன் கருதி மேலதிகமாக 2000 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளது.

இந்த விசேட பஸ் சேவைகள் எதிர்வரும் 6ம் திகதி முதல் 24ம் திகதி வரை கொழும்பு புறக்கோட்டை மத்திய பஸ்தரிப்பு நிலையம், மற்றும் பிரதேச அலுவலகங்களில் முன்னெடுக்கப்படும்இலங்கை போக்குவரத்துச் சபைக்கு உட்பட்ட 103 டிப்போக்களை உள்ளடக்கிய வகையில் இடம்பெறும் என்று இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர்பி.எச்.ஆர்.டி.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

நுவரெலியா, கண்டி, பதுளை ஆகிய பிரதேச அலுவலகங்களில் இருந்து தேவையான மேலதிக பஸ்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related posts: