சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ். மாவட்டச் சிகை ஒப்பனையாளர்களுக்கு நேரக் கட்டுப்பாடு தளர்வு 

Thursday, April 7th, 2016

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ். மாவட்டச் சிகை ஒப்பனையாளர்களுக்கான நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் சிகை ஒப்பனையாளர்களின் கூட்டுறவுச் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று – 7 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் எதிர்வரும்-13 ஆம் திகதி வரை இந்த நேரக் கட்டுப்பாடு தளர்வு அமுலிலிருக்கும். எதிர்வரும் – 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வழமையான விடுமுறை தினம் ஆன போதும் சிகை ஒப்பனை நிலையங்களைத் திறந்து தொழிலில் ஈடுபடுமாறும் , எதிர்வரும் -14 ஆம் திகதி முதல் வழமையான நேரக் கட்டுப்பாடு மற்றும் விடுமுறை தினங்கள் நடைமுறைக்கு வரும் எனவும் மேற்படி சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: