சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் தட்டுப்பாடின்றி எரிபொருளை பெறமுடியும் – வலுசக்தி அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, March 23rd, 2022

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு, இந்த வார இறுதியில், கிரமமாக குறைவடையும் என எதிர்பார்ப்பதாக வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டின்போது, பிரச்சினையின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை நாட்டில் ஏற்படும் என நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்டபோது, அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, 20,000 மெட்ரிக் டன் எரிபொருளைக் கையிருப்பில் வைத்துக்கொண்டு, விநியோகத்தை முன்னெடுக்கக்கூடிய நிலை உள்ளது.

வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்புவது போன்று, பிளாஸ்டிக் கலன்களில் எரிபொருளைக் கொள்வனவு செய்யும் நிலையும் அதிகரித்துள்ளது.

மூன்று, நான்கு நாட்களுக்கு அவசியமான, டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன கையிருப்பில் உள்ளன.

இந்த நிலையில், நான்கு நாட்களுக்கு ஒரு முறை, எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வரவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

Related posts: