சித்தன்கேணியில் பாழடைந்த கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு !

Thursday, August 24th, 2017

சித்தங்கேணி பகுதியில் உள்ள காணி ஒன்றிலிருந்த பாழடைந்த கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம்  ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டைப்பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் வீசிய துர்நாற்றத்தை அடுத்து அயலவர்களால்  குறித்த காணிக்குள் இருந்த பாழடைந்த கிணற்றை பார்வையிட்டபோதே குறித்த பெண்ணின் சடலம் இருப்பதையும் அதிலிருந்தே துர்நாற்றம் வீசுவதும் அயலவர்களால் கண்டறியப்பட்டது.

குறித்த சடலம் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் சுழிபுரம் பகுதியில் காணமல் போயிருந்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த பெண்ணுடையதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த சடலமான பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் காணப்படுவதாகவும், கிணற்றுக்கு அண்மையில் இழுத்து சென்றது போன்ற அடையாளங்கள் தென்படுவதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

Related posts: