சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை இன்று ஆரம்பம் – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Monday, April 29th, 2024

தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஊடக ஆசிரியர் வெற்றிடங்களுக்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 02 ஆம் திகதி இடம்பெற்ற போட்டிப் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இது தொடர்பான நேர்முகத்தேர்வுகள் எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதி வரை இசுருபாய கல்வி அமைச்சில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


கொரோனா தொற்றாளர் எண்ணிக்கையில் ஆயிரத்தை நெருங்கியது இலங்கை – குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 559 ஆக ...
சுகாதார வழிமுறைகளை மீறிய 68 பேருந்துகளின் வீதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து - போக்குவரத்து இராஜாங்க அம...
21 ஆவது திருத்த இறுதி வரைபு தொடர்பில் நாளை விசேட கலந்துரையாடல் - நீதி அமைச்சரால் நாடாளுமன்ற உறுப்பின...