சிங்கப்பூர் – இலங்கை வர்த்தக உடன்படிக்கை – அமைச்சர் மலிக் சமரவிக்கிரம!

சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கை ஜூலை மாதத்திற்கு முன்னர் கைச்சாத்திடப்படும் என அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.
சீன கம்பனியுடனும் இந்த வருடத்திற்குள் புதிய வர்த்தக உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.சர்வதேச உறவுகளை விரிவுபடுத்தி நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும்.இதற்கு சர்வதேச சமூகத்தின் உயர்ந்த பட்ச ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளது.
சிங்கப்பூருடன் வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் புதிய சுதந்திர வர்த்தக வலயத்தை அமைக்க சந்தர்ப்பம் கிட்டும் என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.இதன் மூலம் தொழில் இன்மைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Related posts:
பஞ்சம் இரட்டிப்பாகும் : மிகுந்த ஆபத்தில் 10 நாடுகள் - எச்சரிக்கை விடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் உலக ...
கொட்டதெனியாவ பகுதியில் வெடிப்பு சம்பவம் – இந்திய பிரஜை உயிரிழப்பு - மேலும் இருவர் காயம்!
12 வயதிற்கு குறைந்த சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பரிந்துரை - சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்த...
|
|