சிங்கப்பூருக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வழங்கும் நாடாக இலங்கை விரைவில் மாறும் – இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவிப்பு!

Tuesday, November 30th, 2021

சிங்கப்பூருக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வழங்கும் நாடாக இலங்கை விரைவில் மாறக்கூடும் என சூரிய சக்தி, காற்றாலை மற்றும் நீர் மின் உற்பத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து நாடாளுமன்றில் மேலும் தெரிவித்த அவர் –  “கடற்கரையில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு சிங்கப்பூருடன் நாங்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக மாற்ற சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது, அதில் இலங்கையும் பங்கு வகிக்க வேண்டும் என்று விரும்புகிறது.

சிங்கப்பூருக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வழங்குவதில் பங்களிப்பதற்காக சிங்கப்பூருடன் நாங்கள் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

10,000 மெகாவாட்களை உற்பத்தி செய்யும் கடல்சார்ந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை ஆரம்பிக்கும் சாத்தியம் இலங்கைக்கு உள்ளது.

அந்தவகையில் எரிசக்தி நெருக்கடியைத் தீர்க்க அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஒன்றிணைய வேண்டும்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இலங்கையின் முயற்சிகளின் வெற்றியில், இந்தியாவும் சீனாவும் முக்கிய பங்கு வகிக்கும் - தெ ஹிந்துஸ்தான் ...
பூநகரியில் 1200 ஏக்கர் நிலத்தில் சூரிய மின்சாரத் திட்டம் – அணை அமைத்து நிலத்தடி நீரை பாதுகாக்கும் தி...
வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வுக் கொலை - மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகள் ந...

புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விவகாரம் குறித்த அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் கையளிப்பு!
பொருளாதார நெருக்கடியினால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கனடாவிடமி...
விஹாரமாதேவி பூங்காவை மீண்டும் கொழும்பு மாநகர சபைக்கு வழங்குங்கள் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவ...