சிங்கப்பூரிலிருந்து சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட பறவைகளுடன் ஒருவர் கைது!

Monday, November 19th, 2018

சட்ட விரோதமான முறையில் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சில பறவைகளுடன் இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சிலாபம், கட்டுனேரிய பகுதியை சேர்ந்த 34 வயதுடைய வியாபாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடம் இருந்து 10 லவ் பேர்ட்ஸ் மற்றும் விஷேட கிளி வகையை சேர்ந்த பறவைகள் 17 இனை சுங்க அதிகாரிகளால் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரிற்கு ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பறவைகள் சிங்கப்பூருக்கு மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: