சிக்கனமாக பயன்படுத்துங்கள் – மின்சக்தி எரிசக்தி அமைச்சு!

Tuesday, May 21st, 2019

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுமக்களின் மின்சார பாவனை அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தேவையற்ற மின்குமிழ்களை அணைத்து விடும்படியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கடும் வெப்பமான காலநிலையால் நீர் தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்து வருவதாகவும் சுலக்ஷன ஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

Related posts: