சிகை ஒப்பனை நிலையங்களின் நேரக் கட்டுப்பாடு தளர்வு

Tuesday, October 17th, 2017

தீபாவளிப் பெருநாளை ஒட்டி யாழ். மாவட்டச் சிகை ஒப்பனையாளர் கூட்டுறவுச் சங்கங்களின் ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்துச் சிகை ஒப்பனை நிலையங்களினதும் நேரக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.

இதனால் யாழ். மாவட்டச் சிகை ஒப்பனையாளர்கள் மகிழ்வடைந்துள்ளனர். கடந்த புதன்கிழமை தொடக்கம் இன்று செவ்வாய்க்கிழமை(16) வரை இந்த நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. நேரக் கட்டுப்பாட்டுத் தளர்வின் காரணமாக விடுமுறை தினமான நேற்றைய தினமும் யாழ். மாவட்டத்திலுள்ள சிகை ஒப்பனை நிலையங்கள் திறந்திருந்தன.

தீபாவளி தினமான நாளை புதன்கிழமை விடுமுறை தினமாகையால் யாழ். மாவட்டத்திலுள்ள சிகை ஒப்பனை நிலையங்கள் அனைத்தையும் மூடுமாறும் மறுநாளான வியாழக்கிழமை தொடக்கம் சிகை ஒப்பனை நிலையங்கள் வழமையான நேரக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

இந்திய இழுவைப் படகுகளின் எல்லைதாண்டும் அத்துமீறலை கண்டித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தீவக கடற...
ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதித்தமைக்கு பாகிஸ்தான் அரச தலைவர் இம்ரான் கான் இலங்கை அரசுக்கு நன்றி த...
யாழ் நகரை அண்டியுள்ள பகுதிளிலும் சுகாதார நடைமுறைகளை கடுமையாக கண்காணிப்பு - சுகாதார அதிகாரிகளுக்கு வட...