சிகிரியாவை கட்டணமின்றி பார்வையிடலாம்!
Thursday, May 16th, 2019விசாக பூரணை மற்றும் தேசிய தொல்பொருள் தினம் என்பனவற்றின் காரணமாக உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் சிகிரியாவை மூன்று தினங்களுக்கு கட்டணமின்றி பார்வையிடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது
நாளை மறுதினம்முதல் எதிர்வரும் 20ஆம் திகதிவரை இந்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என சிகிரியா திட்ட முகாமையாளர் ஓய்வுபெற்ற மேஜர் அநுர நிஷாந்த தெரிவித்துள்ளார்.
சிகிரியாவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது கிடைக்கப்பெற்ற தொல்பொருட்கள் பாதுகாக்கப்பட்டுள்ள பகுதிகளையும் இலவசமாக பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது
அத்துடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்தப் பகுதியை இலவசமாக பார்வையிடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது
இதேநேரம், சுற்றுலாத்துறையினர் பாதுகாப்புக்காக இராணுவத்தினர், விமானப் படையினர் மற்றும் சிகிரியா காவல்துறையினர் ஆகியோர் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
|
|