சிகிச்சைகளை விரும்பாத சிலரது குறுகிய எண்ணங்களே இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரிக்க காரணம் – வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன சுட்டிக்காட்டு!
Sunday, May 9th, 2021நாட்டில் கொவிட் பரவல் மூன்றாம் அலை ஆரம்பமானதன் பின்னர் தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கையும் , மரணங்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது.
இன்றிலையில் வெள்ளியன்று ஒரே நாளில் 19 கொவிட் மரணங்களும் நேற்று சனிக்கிழமை 22 மரணங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் ஒரே நாளில் அதிகூடிய கொவிட் மரணங்கள் பதிவானமை இது முதல்தடவையாகும்.
தனிமைப்படுத்தல் அல்லது சிகிச்சைகளை விரும்பாத சிலர் குறுகிய எண்ணங்களால் தொற்று அறிகுறிகள் ஏற்படுகின்ற போதிலும், அவற்றை கவனத்தில் கொள்ளாமையின் காரணமாகவே மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தற்போது பரவியுள்ள வீரியம் மிக்க வைரஸ் காரணமாக எதிர்வரும் இரு வாரங்களில் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாது என்று சுகாதார தரப்புக்கள் எச்சரித்துள்ளன.
இந்நிலையில் நேற்று சனிக்கிழமை ஆயிரத்த 896 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 40 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் ஒரு இலட்சத்து 3098 பேர் குணமடைந்துள்ளதோடு, 18 அயிரத்து 446 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே
யாழ்ப்பாணம் – நயினாதீவு நாக விகாரையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த தேசிய வெசாக் நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய குறித்த நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23 ஆம் திகதிமுதல் ஒரு வாரத்தை அரச வெசாக் வாரமாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்ததுடன், பிரதான நிகழ்வை யாழ்ப்பாணம் நயினாதீவில் நடத்த புத்தசாசன அமைச்சு திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது நிலவும் கொரோனா நிலையை கருத்திற்கொண்டு வெசாக் பண்டிகையை வீடுகளிலேயே கொண்டாடுமாறு புத்த சாசன அமைச்சின் செயலாளர் கபில குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|