சிகரட் விற்பவர்களுக்கு அரச அனுமதி பெறவேண்டும்!

Monday, September 12th, 2016

சிகரட் விற்பனை செய்பவர்கள் அதற்கான முறையான அரச அனுமதிப்பத்திரத்தை பெறவேண்டும் என்ற நடைமுறையை அறிமுகப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த சங்கத்தின் எழுத்துமூலமான கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இன்று அனுப்பி வைத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் நவிந்த சொய்சா தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சிகரட்டுக்களை விற்பனை செய்ய அனுமதிப்பத்திரம் இருக்க வேணடும் எனவும் அனுமதிப்பத்திரமின்றி ஏனைய வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்வது முற்றாக தடை செய்யப்பட வேண்டும் எனவும் சிகரட் பாவனையை குறைக்க அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவிதமான செயற்பாடாக இருந்தாலும் அதற்கு, மருத்துவ அதிகாரிகள் சங்கம் முழுமையாக உதவும்.

புகைத்தல் மற்றும் மது பாவனையை சமூகத்திலிருந்து இல்லாதொழிக்கும் வேலைத்திட்டங்கள் தற்போது அவசியமான தேவையாக உள்ளது. அதனடிப்படையில் 90 சதவீத வற் வரி அதிகரிப்பு மற்றும் சிகரட் பைக்கற்றுக்களில் வெற்றுப்பொதியிடல் போன்ற விடயங்களும் பாராட்டப்படத்தக்க விடயங்களாகும்.

வைத்தியத்துறையில் உள்ளவர்களது நியமனம் மற்றும் அவர்களுக்கான நலன்திட்டங்கள் முறையாக அரசாங்காத்தினால் நடைமுறைப்படுத்தப்படுமானால் மேலும் திறம்பட வைத்தியத்துறையை கொண்டு சேர்க்க முடியும். அதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் எமது சங்கம் வழங்கும் என்றார்.

GMOA

Related posts: