சாவகச்சேரி வைத்தியசாலையில் பொலித்தீன்களுக்குத் தடை!

சாவகச்சேரி வைத்தியசாலை வளாகத்திற்குள் பொலித்தீன்கள் மற்றும் கோம்பையுடன் இளநீர் கொண்டு செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்களை அனுமதிக்கும் நேரங்களில் பாதுகாப்பு அலுவலர்கள் பார்வையாளர்கள் கொண்டு வரும் பைகளை சோதனையிட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர்.
பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பொருட்கள் வைத்தியசாலைக்குள் கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களுக்கு இளநீர் கொடுக்க விரும்புபவர்கள், இளநீரை போத்தலில் கொண்டு வருமாறு கேட்கப்படுகின்றனர். வர்த்தக நிலையங்களில் பொருட்கள் வாங்கும்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பைகள் வழங்கினால் அவற்றை வைத்தியசாலைக்கு வெளியே வைத்துள்ள தொட்டிகளில் போட வேண்டும். என்று சாவகச்சேரி வைத்தியசாலை நிர்வாகத்திறுர் அறிவித்தனர்.
இதனையடுத்து பாதுகாப்பு அலுவலர்கள் வைத்தியசாலை வளாகத்திற்குள் பொலித்தீன்கள் மற்றும் கோம்பையுடன் இளநீர் கொண்டு செல்வதை அனுமதிப்பதில்லை என்று தெரிவித்தனர்.
Related posts:
|
|