சாவகச்சேரி வைத்தியசாலையில் இரத்ததானம்!

Friday, November 11th, 2016

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் குருதிக்காப்பகம் அமைப்பதற்கான முன்நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிணங்க குருதிக் காப்பகத்திற்குரிய அதிகாரி ஒருவர் பயிற்றப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். இருந்தும் குறித்த சேவையைச் செய்வதற்கான கட்டட வசதிகள் அங்கு இல்லாமையினால் குருதிக் காப்பகத்தை சாவகச்சேரி வைத்தியசாலையில் அமைத்துக்கொள்வதில் பல இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலை நிர்வாகத்தினர் யாழ்.பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தினரை கேட்டக்கொண்டதற்கு அமைவாக அங்கு பயிற்றப்பட்ட வைத்தியர் ஒருவரை நியமித்துள்ளதுடன் குறித்த வைத்தியசாலையில் உள்ள விடுதியொன்றில் குருதிக் காப்பகத்தை உருவாக்க முயற்சிகள் முன்னெடக்கப்பட்டாதகவும் இருந்தும் அது இதுவரை நிறைவுசெய்யப்படவில்லை என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதனிடையே ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு நேற்றையதினம்(10) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்து அவரது ஆதரவாளர்களால் குருதி கொடையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

unnamed (1)

Related posts: