சாவகச்சேரி வைத்தியசாலையில் பாதுகாப்பு அறை இல்லாது பெண் ஊழியர்கள் சிரமம்!

Tuesday, January 17th, 2017

சாவகச்சேரி வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்புடன் கூடிய அறை மற்றும் அலுமாரிகள் இல்லாமையினால் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் பெண் ஊழியர்களுக்கான தனியான பாதுகாப்புடன் கூடிய அறை மற்றும் அலுமாரிகள் இல்லை. பாதுகாப்பு அற்ற அறைகளில் உடை மாற்ற வேண்டியுள்ளது. கைப்பைகளையும் அங்கு வைத்துவிட்டே செல்ல வேண்டியுள்ளது. வைத்தியசாiயில் 89 பெண் சிற்றூழியர்கள் பணியாற்றுகின்றனர் என்று பெண் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

கடமையாற்றும் விடுதிகளில் உடைகளை மாற்றவும், பொருள்கைள வைக்கவும் அனுமதியளித்திருந்தோம். 3 வாரங்களுக்கு முன்னர் பெண் சிற்றுறூழியர் தனது கைப்பையிலிருந்த பணமும், அலைபேசியும் காணமற்போயுள்ளன எனத் தெரிவித்தார். பொருட்கள் திருட்டு போன அறை பொதுமக்கள் செல்லக்கூடிய இடம் இல்லையென்பதால் ஊழியர்கள் தமது உடமையை அங்கு வைத்துள்ளனர். வைத்தியசாலையில் முன்னர் சேதமடைந்து தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த சிற்றூழிய வதிவிட விடுதிகள் தற்போது பாவனையின்றிக் காணப்படுகின்றன. அவற்றைச் சீரமைத்து வழங்கினால்  வைத்தியசாலையில் கடமையாற்றும் அனைத்துப் பெண் ஊழியர்களும் பயன்படுத்த வசதியாக இருக்கும். இந்த இரு கட்டடங்களையும் சீரமைக்க சுகாதார அமைச்சு அல்லது பிராந்திய சுகாதாரத் திணைக்களம் நிதி வழங்கினால் சீரமைத்து பெண் சிற்றூழியர்களின் பயன்பாட்டுக்கு வழங்க முடியும் என்று வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

chavakachcheri

Related posts: