சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பில் மக்கள் குற்றச்சாட்டு!
Thursday, March 21st, 2019சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பாக சாவச்சேரி நகரசபையின் மாதாந்த அமர்வின் போது உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பாக நகரசபை உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுகாதார நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. குறிப்பாக நோயாளர் விடுதியில் உள்ள மலசல கூடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றன. வைத்தியசாலை ஊழியர்கள் மலசலகூட சுத்திகரிப்பை சரியான முறையில் செய்வதில்லை. அத்துடன் ஆண் நோயாளர் விடுதியில் சில மலசல கூடங்கள் கதவுகள் அற்ற நிலையில் காணப்படுகின்றன.
மேலும் அண்மையில் விபத்து காரணமாக ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவரை வைத்தியர் வந்து பார்வையிட சில மணி நேரங்கள் ஆகியது. வைத்தியசாலையின் தரம் உயர்கின்ற போதிலும் இன்றுவரை இரத்தப்பரிசோதனையை தனியார் ஆய்வுகூடங்களில் பணம் கொடுத்து செய்ய வேண்டிய நிலை காணப்படுகிறது.
இவ்வாறு வைத்தியசாலையில் காணப்படுகின்ற குறைபாடுகளை பொதுமக்கள் தெரிவிக்க வைத்தியசாலையில் நலன்புரி அமைப்புக்காணப்படவேண்டும். ஆனால் அந்த நலன்புரி அமைப்பு மக்கள் பார்வைக்கு இலகுவானதாகவும், குறைபாடுகளைத்தெரிவிக்க வசதியானதாகவும் இருக்க வேண்டும் என சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|