சாவகச்சேரி வைத்தியசாலையில் பாரிசவாத நோயாளர்கள் விடுதி!
Tuesday, November 1st, 2016பாரிசவாத நோயாளர்களுக்கான விடுதி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்க மாகாணத்தில் இதுவே முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பாரிசவாத நோயாளர்களுக்கான விடுதியாகும். யாழ்.போதனா வைத்தியசாலையிலிருந்து அனுப்பப்படும் நோயாளர்களே அங்கு சேர்க்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது. வைத்தியசாலை பொறுப்பதிகாரியும் யாழ்.போதனா வைத்தியசாலை நரம்பியல் பிரிவு வைத்திய நிபுணரும் இணைந்த விடுதிக் கட்டடத்தை திறந்தனர்.
யாழ்.மாவட்டத்தில் அண்மைக்காலமாக பாரிசவாத நோயால் பலர் பாதிக்கப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் போதிய இடவசதியின்மையால் குறுகிய கால சிகிச்சையின் பின்னர் நோயாளர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர். அவர்கள் தொடர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சிரமங்களின் மத்தியில் சென்று வருகின்றனர். நோயாளர்கள் விடுத்த வேண்டுகோளையடுத்து சுகாதார திணைக்களத்தினர் மேற்கொண்ட ஆய்வுகளின் பிரகாரம் சாவகச்சேரி வைத்தியசாலையில் கட்டடம் அமைக்க இடம் தெரிவு செய்யப்பட்டு இன்னமும் நிதி கிடைக்காததால் வேலைகள் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
Related posts:
|
|