சாவகச்சேரி வெடிபொருள் மீட்பு: மேலும் ஐவர் கைது

அண்மையில் சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஐவர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதான சந்தேகநபரின் அலைபேசியிலிருந்து உள்வந்த மற்றும் வெளிச்சென்ற அழைப்புகளின் ஊடாக மிகநெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், நெல்லியடி மற்றும் சாவக்கச்சேரி ஆகிய இடங்களை வதிவிடமாக கொண்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
பலாலிக்கு வருகின்றது இந்திய குழு !
ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மீதான அமெரிக்காவின் தடைகள் இலங்கையை பாதிக்காது - அமெரிக்கா அறிவிப்பு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சிடும் செலவுகள் வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்தே தீர்மானிக்கப்பட...
|
|