சாவகச்சேரி பேருந்து நிலைய பெயர்ப்படிகம் விஷமிகளால் தகர்ப்பு : சுயலாப அரசியல்வாதிகளின் தூண்டுதல் காரணம்!

Wednesday, January 10th, 2018

சாவகச்சேரி பேருந்து  நிலைய நினைவுக்கல் இனந்தெரியாத விஷமிகளால் தகர்த்தெறியப்பட்டுள்ளது  .

சாவகச்சேரி நகருக்கென நிரந்தர  பேருந்து நிலையம் இல்லாதிருந்த நிலையில் நாளாந்தம் பயணிகளும் பாதசாரிகளும் மழைகாலங்களிலும் வெயில் காலங்களிலம் பலவேறு பிரச்சினைகளுக்கு சௌகரியங்களுக்கும் முகங்கொடுத்து வந்திருந்தனர்

இந்நிலையில் அந்தப்பகுதி மக்களும் பயணிகளும் சாவகச்சேரி நகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ச்சியாக பலதரப்பினரிடமும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தநிலையில் அப்போது அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் 2011 ஆண்டு காலப்பகுதியில் குறித்த பேருந்து நிலையம் புதுப் பொலிவுடன் நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டிருந்தது

அதற்கு சான்றாக அங்கு நினைவுப் படிகம் ஒன்றும் அமைக்பப்பட்டிருந்த நிலையில் அந்த வரலாற்றை இல்லாதொழிக்கும் வகையில் சில விஷமிகள் சுயலாப அரசியலின் தூண்டுதலை அடுத்து நினைவுப் படிகம் தகர்த்தெறியப்பட்டுள்ளது.

விஷமிகளின் இந்த செயலுக்கு சமயத் தலைவர்கள் கல்விமான்கள் புத்திஜீவிகள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தமது கண்டனத்தையும் விசனத்தையும் தெரிவித்துவருகின்றனர்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருமாதம் இருக்கும் இத்தருணத்தில் இந்த நினைவுப் படிகம் சேதமாக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் சுயலாப அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கும் மற்றுமொரு சம்பவமாக நோக்கப்படுகின்றது.

கடந்த 2011. மார்ச் 05ஆம் திகதி குறித்த பேருந்து நிலையம் அன்று அமைச்சராகவும் இன்றையா நாடாளுமன்ற உறுப்பினருமான  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலானளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

26736041_1640958425943238_1530167450_o

26829418_1640958372609910_1380942745_o (1)

26735333_1640958389276575_1971917265_o

26827915_1640958345943246_2039748609_o

Related posts: