சாவகச்சேரி நகர சபையில் இனிமேல் குடிதண்ணீருக்கு காசு!

Tuesday, January 22nd, 2019

சாவகச்சேரி பிரதேச சபையால் வழங்கப்படும் குடிதண்ணீருக்கு 100 ரூபா கட்டணம் அறவிடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வரணி வடக்கு, நாவற்குழி, கைதடி, நுணாவில் ஆகிய இடங்களுக்கு உழவு இயந்திர பவுசர்கள் மூலம் சாவகச்சேரிப் பிரதேச சபை குடிதண்ணீர் வழங்குகின்றது. 15 இடங்களில் நீர்த்தாங்கிகள் அமைக்கப்பட்டு குடிதண்ணீர் வழங்கப்படுகின்றது. இதற்காகச் சபை மாதாந்தம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை எரிபொருளுக்காகச் செலவிட வேண்டியுள்ளது. போதியளவு வருமானம் இல்லாத நிலையில் இந்தப் பெரும் நிதிச் செலவைக் கையாள்வது சபைக்கு இயலாத காரியம் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

எதிர்வரும் கோடை காலத்தில் மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு வறட்சிக் கால அடிப்படையில் குடிதண்ணீர் வழங்கவேண்டியுள்ளது. அதையடுத்து ஒரு நாளைக்கு இரு தடவைகள் குடிதண்ணீர் வழங்குவதற்குக் குடும்பம் ஒன்றிடமிருந்து 100 ரூபா அறவிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

எந்தப் பகுதியில் அதிகளவு குடிதண்ணீர் தேவை உள்ளது என்பது தொடர்பில் சபை உறுப்பினர்கள் மக்களுடன் கலந்துரையாடிச் சபைக்கு அறிவிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: