சாவகச்சேரி உட்தெருக்களில் விளக்குகள் ஏதும் ஒளிர்வதில்லை – மக்கள் குற்றச்சாட்டு!

Saturday, December 23rd, 2017

சாவகச்சேரி பிரதேசசபைக்குட்பட்ட கிராமப்புற சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்குகளில் பெரும்பாலானவை பழுதடைந்துள்ளன எனவும் இதனால் இரவு வேளைகளில் நடமாட அச்சம் நிலவுகின்றது என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பிரதேச மக்கள் தெரிவித்ததாவது;

கடந்த 2015 ஆம் ஆண்டு சபை நிதியிலிருந்து சபையின் உறுப்பினர்களின் வேண்டுகோளின் பிரகாரம் நிதி ஒதுக்கப்பட்டு அந்தந்த உறுப்பினர்களால் அடையாளமிடப்பட்ட இடங்களில் இலங்கை மின்சார சபையினரால் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டன. அவை பழுதடைந்து ஒருவருடத்துக்கு மேலாகியும் புதிய மின்விளக்குகள் பொருத்தப்படவில்லை.

பிரதேசசபையின் பெரும்பாலான பகுதிகள் கிராமப்புறம் என்பதால் பெருமளவான சாலைகளில் மின்கம்பங்கள் நடப்பட்டு மின்விநியோகம் இடம்பெற்று வருவதால் அனைத்துப் பகுதிகளிலும் தெருவிளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதேசசபைச் செயலாளரைக் கோரியுள்ளோம் என்றனர்.

இது தொடர்பாக பிரதேசசபை தெரிவித்ததாவது – தமது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல முதன்மைச் சாலைகள் உள்ளன. குறிப்பாக மீசாலை தொடக்கம் எழுதுமட்டுவாழ் வரையும் நுணாவில் தொடக்கம் நாவற்குளி வரையுமான ஏ ௲ 9 சாலையும் கொடிகாமம் பருத்தித்துறைசாலை கொடிகாமம் கச்சாய்சாலை புத்தூர் சந்தி மட்டுவில்சாலை கனகன்புளியடி நுணாவில்சாலை கனகன்புளியடி சரசாலை வடக்குசாலை வேம்பிராய் வரணிசாலை கைதடி கோப்பாய்சாலை நாவற்குளி கேரதீவுசாலை போன்றவை முதன்மைச் சாலைகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றில் தெருவிளக்குகள் பொருத்துவதில் சபை முன்னுரிமை செலுத்தியுள்ளதால் கிராமப்புறங்களில் தெருவிளக்குகள் பொருத்துவதில் தாமதமேற்பட்டுள்ளன. இருப்பினும் அவற்றுக்கும் தெருவிளக்குகள் பொருத்துவதற்கு நடவடிக்கைகள் மெற்கொள்ளப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது

Related posts: