சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 2 இலட்சத்துக்கு அதிகமான நோயாளர்கள் சிகிச்சை!

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் கடந்த வருடம் 2 லட்சத்துக்கு அதிகமான நோயாளர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர் என மருத்துவமனை செய்திக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 990 பேர் வெளிநோயாளர் பிரிவிலும் சுமார் 70 ஆயிரம் பேர் கிளினிக்குகளிலும் சிகிச்சை பெற்றுள்ளனர். அத்துடன் மருத்துவமனையில் உள்ள பத்து விடுதிகளிலும் 12 ஆயிரத்து 218 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். அத்துடன் பல் சிகிச்சைப் பிரிவில் 9 ஆயிரத்து 284 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த ஒரு வருடத்தில் நாய், பூனை, குரங்கு, எலி மற்றும் விஷ ஜந்துக்களால் கடியுண்ட நிலையில் ஆயிரத்து 15 பேர் விலங்கு விசர் நோய்த் தடுப்பு ஊசி மருந்து ஏற்றியுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
|
|