சாவகச்சேரியில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்!

Friday, October 21st, 2016

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது மதுபோதையில் நின்ற மூவர் நடுவீதியில் வைத்து கடும் தாக்குதல் மேற்கொண்டனர்.

இந்தத் தாக்குதலைத் தடுக்க முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் வைத்தியசாலை பணியாளர் ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது. பல பேர் முன்னிலையில் இடம்பெற்ற இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருவர் தலைமறைவாகியுள்ளனர் என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு இலக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர் கடைக்குச் சென்ற போது வைத்தியசாலைக்கு வெளியில் மதுபோதையில் நின்றவர்கள் இடைமறித்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதில் மகேந்திரன் டினோசன் (வயது-22) என்ற பாதுகாப்பு உத்தியோகத்தரே படுகாயமடைத்தார். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

stik

Related posts: