சாவகச்சேரியில் இரு மோட்டார்ச் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: இருவர் படுகாயம்!

Saturday, July 29th, 2017
சாவகச்சேரி நகரிலுள்ள ஆதார வைத்தியசாலைக்கு அருகில் இரு மோட்டார்ச் சைக்கிள்கள் நேருக்கு நேர்  மோதுண்டத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் இன்று சனிக்கிழமை(29) பிற்பகல்- 01.40 மணியளவில் இடம்பெற்றுள்து.
குறித்த சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாகச் சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: