சாவகச்சேரியில் இன்றுமுதல் மாட்டிறைச்சிக்கடை ஆரம்பம்!

Thursday, April 11th, 2019

சாவகச்சேரி நகரசபையின் மாட்டிறைச்சிக்கடை இன்று தொடக்கம் இயங்கவுள்ளதாக நகரசபையினர் அறிவித்துள்ளனர்.

மாட்டு இறைச்சிக்கடை குத்தகைக்கு விடுவது தொடர்பில் கேள்வித் தொகை குறித்து பகிரங்க ஏலத்தில் விடப்பட்டது. இதன்போது ஒருவர் இந்த வருடத்துக்கு குத்தகைக்கு எடுத்துள்ளார். இவர் இன்று மாட்டிறைச்சிக்கடையை ஆரம்பிக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

சாவகச்சேரி நகரசபையால் மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி போன்ற கடைகள் குத்தகைக்கு விடுவது தொடர்பாக கேள்வி அறிவித்தல் கோரிய போது எவரும் விண்ணப்பிக்கவில்லை.

இது தொடர்பாக சபை நிர்வாகத்தினர் மாகாண உள்ளூராட்சி ஆணையாளருடன் தொடர்பு கொண்டதை அடுத்து கேள்வித்தொகை ஏலத்தில் விடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுதது கடந்த மாதம் ஏலம் நடத்தப்பட்டது. அப்போது இரு ஆட்டிறைச்சிக்கடையும், கோழி இறைச்சிக்கடையும் குத்தகைக்கு ஏலத்தில் வழங்கப்பட்டன.

மாட்டிறைச்சிக்கடையினை குத்தகைக்கு எடுக்க எவரும் வராத நிலையில் ஏனைய ஏலம் முடிந்த பின்னர் அங்கு வந்த ஒருவர் தனக்கு மாட்டிறைச்சிக்கடையை வழங்குமாறு கோரினார். ஏலம் முடிவடைந்து விட்டது எனக்கூறி மறு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந் நிலையிலேயே மாட்டிறைச்சிகடையை குத்தகைக்கு விடுவது தொடர்பில் ஏலம் கூறிய போது கடையை நடத்த ஒருவர் முன்வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

Related posts: